என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
1992 ஆம் ஆண்டு தமிழ்ப்புலவர் வகுப்போடு தொடங்கப்பட்ட இக்கல்லூரி 2000 ஆம் ஆண்டு முதல் கலை அறிவியல் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2020 ஆம் ஆண்டு முதல் முதல்வராகப் பணியாற்றி வருகிறேன்.
ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பெறவேண்டும் என்னும் உயரிய நோக்கத்தோடு எம் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் வேலைக்குச் செல்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.
கல்வி கற்பதற்கு ஏற்ற அமைதியான சூழல், தகுதியுடைய பேராசிரியர்கள் மூலம் பயிற்றுவித்தல் மற்றும் மாணவர்களின் திறன்மேம்பாட்டு பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி, போட்டித் தேர்வுகளுக்கானப் பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப் படுகின்றன.
மாணவர்களைத் தனிப்பட்ட முறையில் கண்காணித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதியாக நிற்கிறோம். ஆற்றங்கரையில் ஓர் அறிவாலயமாக இருக்கும் எம் கல்லூரியில் படித்து வாழ்வில் முன்னேற என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.