ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
மாணவர்களை ஆளுமை பண்புடையவர்களாகவும் தன்னம்பிக்கை உடையவர்களாகவும் மாற்றிட SPOKEN ENGLISH
பயிற்சிகள் வழங்குகிறது.
ஆங்கிலச் செய்தித்தாள்கள், ஆங்கில நூல்கள் ஆகியவற்றை நூலகங்களில் எடுத்து வாசிக்க பாடவேளைகளில்
தனியாக நூலக வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படுகிறது.
இலக்கியம், மொழி, வரலாறு போன்ற தலைப்புகளில் ஆழமான அறிவைப் பெற நாடகங்கள் நடத்தியும், கவிதை, பேச்சுப் போட்டிகள் நடத்தியும் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறது.
ஆங்கில மொழி அறிவை மேம்படுத்த இணையவழி வகுப்புகள் நடத்தப்படுத்தி மின்சான்றிதழ்கள் வழங்கி
மாணவர்களின் தனித்திறனை வளர்க்கிறது.
மொழிப்பெயர்ப்புத்திறனை மேம்படுத்தவும் மொழி அறிவினை கொண்டுவரவும் பல்வேறு இடங்களில் நடைபெறும்
கருத்தரங்கம் பயிலரங்கம் போன்றவற்றில் மாணவர்களை பங்குகொள்ள ஊக்கமளிக்கப்படுகிறது.
மாதம் ஒருமுறை ஆங்கிலத்துறை சார்ந்த தகுதியானப் பேராசிரியர்களை வரவழைத்து கருத்தரங்கம், பயிற்சி
வகுப்புகள் நடத்தப்படுகிறது.
ஆங்கிலம் மொழி தொடர்பான குழுவிவாதங்கள், பட்டிமன்றம், வினாடிவினா, போட்டிகள், கலை இலக்கியவிழா
போட்டிகள் எனப் பலவற்றை நடத்தி ஆங்கில மொழி அறிவினையும் குழுமனப்பான்மையை மேம்படுத்திடவும்
செயலாற்றுகிறது