Logo

என் கடன் பணி செய்து கிடப்பதே

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி

[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]

கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003

Logo

தமிழ்த்துறை

மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும்பொருட்டு ஆண்டுதோறும் பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், நாடகம், பாட்டு எனப் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகள் நடத்தி ஊக்கப்படுத்துவதோடு, வெற்றிபெறும் மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பித்து வருகின்றது. அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் மிகச்சிறந்த ஆளுமைகளைச் சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்று அதன்மூலம் மாணவர்கள் தங்கள் ஆளுமைத் திறன்களை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உறுதுணையாகச் செயல்பட்டு வருகின்றது தமிழ்த்துறை.

  • வளாகத்தேர்வுகளிலும் அரசுத்துறைச் சார்ந்த தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்று வேலைவாய்ப்புப் பெற, திறன்வளர் ஆலோசனைகளை வழங்கிவரும் துறையாகத் தமிழ்த்துறை இயங்கி வருகின்றது.
  • மாணவர்கள் எளிதாகத் தேர்ச்சிபெற துறைப்பேராசிரியர்கள் வழிகாட்டி வருகின்றனர்.பாடத்திட்டம் முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு, வினாவங்கி, வினா அமைப்பு, விடைக்குறிப்புகள் ஆகியவை தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி அலகுத் தேர்விலும் பருவத்தேர்விலும் வெற்றிபெற உதவி வருகின்றது. தேர்ச்சிபொறாத மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு நடத்தி, தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
  • கல்வெட்டு,சுவடியியல் போன்ற தாள்களுக்கு தொல்லியல் துறை இடத்திற்கும், சுவடியியல் துறைக்கும் நேரடியாக அழைத்து சென்று பயிற்சி வழங்குகிறது.
  • மேலும் கல்வெட்டியல் துறை சார்ந்த இடங்களுக்கும் தொல்லியல் துறை சார்ந்த இடங்களுக்கும் கல்விச்சுற்றுலாவாக அழைத்து சென்று அவர்களின் திறன்களை மேம்படுத்துகிறது.
  • மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களை முன்னேற்றுவதோடு, தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கித் தங்கள் திறன்களையும் மேம்படுத்த ஊக்கமளிக்கின்றோம்.
  • தமிழிலக்கியத்தில் படைப்பாற்றல் மிக்க மாணவர்களை ஊக்குவித்து அவர்களுடைய படைப்புகளை வெளிக்கொணரச் செயலாற்றுகிறது.

தமிழ்ப்புலவர் (பி.ஏ)

மாது கண்ணன்

துறைத் தலைவர்
தன்விவரம்

அன்னம். தி

பேராசிரியர்
தன்விவரம்

து.அசோகன்,

பேராசிரியர்
தன்விவரம்