கல்லூரி முதல்வரே இக்கழகத்தின் தலைவர் ஆவார். முதல்வரால் அமர்த்தப்பெறும் ஆசிரியர் ஒருவர்
துணைத்தலைவர் ஆவார்.
கல்லூரி மாணாக்கர் அனைவரும் கழக உறுப்பினர் ஆவர்.
மாணவ, மாணவியர் பேச்சுவன்மை பெறுவதற்காகவே நிறுவப்பெற்ற இலக்கியக் கழகமாதலின் கல்லூரி வருகைப்
பதிவேட்டில் உள்ள பெயர் வரிசைப்படி கழகக் கூட்டங்களில் மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பேசிப்
பழகுதல் வேண்டும்.
கழகக் கூட்டங்களில் மாணாக்கர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுதல் வேண்டும். தக்க காரணம் இன்றிக்
கூட்டங்களில் கலந்து கொள்ளத் தவறிய மாணவ, மாணவியர் ஒறுப்புக்கு உள்ளாவர்.
கல்லூரி முதல்வர் உடன்பாடு பெற்றுக் கூட்டங் கூட்டுவதும், மாணாக்கர்களைப் பேசச் செய்வதும்
மாணவர் தலைவர், செயலாளர் ஆகியோரது பொறுப்பாகும்.
கழகச் செயல்முறை, கூட்ட அமைப்பு ஆகியவற்றில் கல்லூரி முதல்வர் முடிவே இறுதியானது.