Logo

என் கடன் பணி செய்து கிடப்பதே

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி

[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]

கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003

Logo

உதவித்தொகை

  • ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
  • மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை.
  • சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களுக்கான கல்வி உதவித்தொகை
  • உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை.
  • அரசு மற்றும் உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவ- மாணவியருக்கு தமிழக அரசு வழங்கும் மாதந்தோறும் ரூபாய் 1000/ உதவித்தொகை

கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் கல்வி உதவித்தொகை

படிக்கும் ஆர்வம் உடைய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை சாதி, சமயம் வேறுபாடு இன்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்தொகையை கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு நேரிடையாக வழங்குகிறது. இந்த உதவித்தொகை பன்னிரெண்டாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் உடன் வழங்கப்படும். கல்லூரியில் பயிலும் காலத்தில் ஒவ்வொர் ஆண்டிலும் பெறும் மதிப்பெண் அடிப்படையிலும் வழங்கப்படும். கீழ்க்கண்ட அட்டவணைப்படி உதவித்தொகை வழங்கப்பெறும்.

  • 75% முதல் 80 % மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு 25 % கல்வி உதவித்தொகை
  • 81% முதல் 85 % மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு 50 % கல்வி உதவித்தொகை
  • 86% முதல் 90 % மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு 75 % கல்வி உதவித்தொகை
  • 90% மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு 100 % கல்வி உதவித்தொகை